டிசம்பர் 4 ஆம் தேதி மத்திய அரசை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அழைப்பு

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்டி, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
x
காவிரியின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் கர்நாடகா அணைக் கட்டிக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கஜா புயலில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டதாக தெரிவித்தார். மேகதாது அணை தொடர்பாக உடனடியாக தமிழக அரசு, சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார். 24 மணி நேரத்தில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததால் அனைத்து கட்சிகளையும் அழைக்க முடியவில்லை என்றும், திருச்சியில் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி மத்திய அரசை கண்டித்து நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கட்சி பேதமின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் என ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்