காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்கி உள்ள அன்புமணி.
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி
x
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்கி உள்ள அன்புமணி,  2-ம் நாளாக பாபநாசம், சுவாமிமலை, சோழபுரம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். சோழபுரம் கடைவீதியில் பேசிய அன்புமணி, காவிரி டெல்டாவில் 28 லட்சம் ஏக்கராக இருந்த பாசன பரப்பு 15 லட்சம் ஏக்கராக குறைந்ததற்கு காவிரியில் வரக்கூடிய தண்ணீரை சேமிக்க முடியாமல் போனதே காரணம் என தெரிவித்தார். கடலில் கலக்கும் காவிரி நீரை சேமிக்க மேட்டூர் அணைக்கு பிறகு வேறு எங்கும் அணை கட்டாததும், ஏரி,  குளம், கால்வாய்களை தூர்வாராததும் காரணம் என அன்புமணி குற்றம்சாட்டினார்.



Next Story

மேலும் செய்திகள்