முதலமைச்சர் மீதான நெடுஞ்சாலை ஒப்பந்த புகார் : சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நெடுஞ்சாலை ஒப்பந்தம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான திமுகவின் புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் மீதான நெடுஞ்சாலை ஒப்பந்த புகார் : சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
x
* தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கியதாக புகார் எழுந்தது. 

* இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

* இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுகவின் மனு குறித்து ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஊழல் கண்காணிப்பு ஆணையர் இந்த விவகாரத்தில் முடிவெடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

* லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. 

* அந்த விசாரணை அறிக்கையை பார்த்த நீதிபதி, இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை உரிய விசாரணை நடத்தவில்லை  என்று கூறி வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார். 

* இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்த ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சிபிஐ 3 மாதங்களில் ஆரம்ப கட்ட விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

* வழக்கில் முகாந்திரம் இருப்பது தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்