அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில், உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு
x
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் மதுசூதனன், கட்சியின் முக்கிய மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். அதிமுக உறுப்பினர் அட்டையை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வெளியிட, அதனை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார். பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல சதிகளை தாண்டி அதிமுக வலுவான கட்சியாக இருப்பதாக தெரிவித்தார். மிகவும் குறுகிய காலத்தில் 1 கோடியே 10 லட்சம்  உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


முன்னதாக பேசிய ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், ஜெயலலிதாவுக்கு மறைவுக்கு பின்னாலும் அதிமுக சிந்தாமல் சிதறாமல் ஒற்றுமையுடன் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். தொண்டர்களால் அதிமுக இயக்கப்படுவதாக அவர் கூறினார்.

 


வெளிநாடுகளிலும் அதிமுகவின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா - முதலமைச்சர் பழனிசாமி


Next Story

மேலும் செய்திகள்