முதல்வர் மீது திமுக தொடர்ந்த வழக்கில் முகாந்திரம் இல்லை - லஞ்ச ஒழிப்புத் துறை

முதலமைச்சர் மீதான திமுக-வின் புகாரில் முகாந்திரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் மீது திமுக தொடர்ந்த வழக்கில் முகாந்திரம் இல்லை - லஞ்ச ஒழிப்புத் துறை
x
* சாலைப்பணி  ஒப்பந்தம் தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஜெகதிஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, திமுக புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால் விசாரணை நடத்த தேவையில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை  தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

* இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

* அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், லஞ்ச ஒழிப்பு துறை, தன்னிச்சையான அமைப்பு எனவும், டிஜிபியிடம் கூட, விசாரணை விவரங்களை தெரிவிக்க தேவையில்லை எனவும்  கூறினார். 

* நீதிபதி குறுக்கிட்டு, 'ஊழல் மற்றும் கண்காணிப்பு ஆணையரை நியமிப்பது யார்' என கேள்வி எழுப்பினார். அதற்கு, மூத்த கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை அரசு நியமிக்கும் என அரசு தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார். இதையடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்