ஹோலந்தேவின் கருத்து பற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்காது மவுனமாக இருப்பது ஏன்? - ராகுல்காந்தி கேள்வி

ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் விவகாரத்தில், ஹோலந்தேவின் கருத்து பற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்காது, மவுனமாக இருப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹோலந்தேவின் கருத்து பற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்காது மவுனமாக இருப்பது ஏன்? - ராகுல்காந்தி கேள்வி
x
* ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் விவகாரத்தில், ஃபிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோலந்தே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி பொய் கூறுவதாக விமர்சித்துள்ளார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஹோலந்தேவின் கருத்து பற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்காது, மவுனமாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். 

* ஃபிரான்ஸ்சின் முன்னாள் அதிபர் இந்திய பிரதமரை திருடன் என்று கூறியுள்ளார். இதனை பிரதமர் மோடி ஏற்கிறாரா?அல்லது மறுக்கிறாரா ?... என தெரிய வேண்டும். ஏற்றுக்கொண்டால், ஆம் ரபேல் ஒப்பந்தத்தை ரூ.30,000 கோடிக்கு அனில் அம்பானிக்கு கொடுத்துள்ளேன் என சொல்ல வேண்டும், இல்லை என்றால், அவர் கூறுவது பொய் என கூற வேண்டும். இதனை விடுத்து, பிரதமர் மோடி வாய் மூடி மவுனமாக இருப்பது ஏன் ? . உரிய விளக்கத்தை அவர் தெரிவிக்க வேண்டும்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரம் : ராஜ்நாத் சிங் பதிலடி

ரஃபேல் ஒப்பந்த விவகாரம், குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டிற்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் அற்றவை என்றார். ஃபிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோலந்தேவின், அறிக்கை தொடர்பாக, பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.  ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, சர்ச்சையை கிளப்புவது தேவையற்றது என ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பிரான்சிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்