அ.தி.மு.க. ஆட்சியை அகற்றும்வரை போராட்டம் தொடரும் - ஸ்டாலின்

அ.தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை தி.மு.க.வின் போராட்டம் தொடரும் என்று ஸ்டாலின் சேலம் ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்டார்.
அ.தி.மு.க. ஆட்சியை அகற்றும்வரை போராட்டம் தொடரும் - ஸ்டாலின்
x
அதிமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நெடுஞ்சாலை, உள்ளாட்சி, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் டெண்டர் விடுவதில் ஊழல் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினார். அ.தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை தி.மு.க.வின் போராட்டம் தொடரும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார். 

ஊழலை ஒழிக்க கொண்டு வரப்பட்ட லோக் ஆயுக்தா அமைப்புக்கு இதுவரை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை எனக் கூறிய ஸ்டாலின், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்குத் துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் :



சென்னை கந்தன்சாவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், சென்னை முன்னாள் மேயர் சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திண்டிவனத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார். 

திருச்சியில், முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தலைமையில், ஆயிரக்கணக்கான திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல, சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறன் கலந்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்