"விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்யுங்கள்" - தமிழக தலைவர்கள் வலியுறுத்தல்
பதிவு : செப்டம்பர் 05, 2018, 11:50 PM
குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐ சோதனையில் சிக்கியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்குமாறு,பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐ சோதனையில் சிக்கியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்குமாறு,பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் , காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் குட்கா முறைகேடு வழக்கில் சேர்க்கப்படுவது உறுதியாகி விட்டதால், அவர்களை இன்னும் பதவியிலும், பணியிலும் நீடிக்க அனுமதிக்க கூடாது என அறிக்கையொன்றில் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதேபோன்று, 
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் வெளிச்சத்திற்கு கொண்டு வருவது, சிபிஐ- யின் கடமை என்று குறிப்பிட்டு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2191 views

பிற செய்திகள்

புயல் பாதிப்பு - அதிகாரிகள் நியமனம் - முதலமைச்சர் பழனிசாமி

கஜா புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் காவல் பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

122 views

"புரியாத பெயரில் திட்டங்கள் - முன்னேற்றத்தை பாதிக்கின்றன" - தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்

மத்திய அரசு புரியாத பெயரில் திட்டங்களை அறிமுகம் செய்வதால் தான் மாநிலத்தின் முன்னேற்றம் பாதிக்கப்படுவதாக மக்களவை துணை சபாயநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

111 views

கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - தினகரன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மீனவர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தினகரன் தெரிவித்தார்.

144 views

கஜா புயலால் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

கஜா புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

269 views

சேலம்: கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றார் முதலமைச்சர்

சேலம் மாவட்டம் தேவூர் அம்மாபாளையத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

308 views

"ஆசிரியரே இல்லாத பாடத்திற்கு தேர்வு-கல்விப் புரட்சி" - அன்புமணி விமர்சனம்

கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்களே நியமிக்கப்படாத நிலையில், அப்பாடத்திற்கு தேர்வு நடத்துவதன் மூலம் தமிழக அரசு புதிய கல்வி புரட்சி படைத்திருப்பதாக பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

737 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.