அ.தி.மு.க.வின் பா.ஜ.க. நிலைப்பாட்டில் மாற்றமா?

பா.ஜ.க. மீது அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்படுகிறது.
அ.தி.மு.க.வின் பா.ஜ.க. நிலைப்பாட்டில் மாற்றமா?
x
பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதால்தான் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்ததாக 16.2.2018 அன்று சொல்லிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்,  24.7.2018 அன்று டெல்லி சென்ற போது பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்காமல் திரும்பினார். அப்போது எதையும் தாங்கும் இதயத்தை அண்ணா கொடுத்திருப்பதாக பன்னிர் செல்வம் தெரிவித்தார். 

"அதிமுக-வின் தயவின்றி மத்தியில் யாரும் ஆட்சியமைக்க முடியாது" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மோடி இருக்கும் போது அ.தி.மு.க.வுக்கு எந்த பயமும் தேவையில்லை. எல்லாவற்றையும், டெல்லியில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 21.10.2017 அன்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார் . ஆனால் அவரே நேற்று விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இனிமேலும் வெறும் ஆதரவை மட்டுமே மத்திய அரசுக்கு கொடுக்க முடியாது என பா.ஜ.க.வை பெயர் சொல்லாமல் விமர்சித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்