நவோதயா பள்ளிகளை திறக்க தமிழக அரசு, மத்திய அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும் - பொன் ராதாகிருஷ்ணன்

நவோதயா பள்ளிகளை திறக்க தமிழக அரசு, மத்திய அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
நவோதயா பள்ளிகளை திறக்க தமிழக அரசு, மத்திய அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும் - பொன் ராதாகிருஷ்ணன்
x
விருதுநகர் மாவட்டம் வரலொட்டி கிராமத்தில் ஆயிரத்து 200 மாணவ, மாணவிகள் படிக்கும் வகையில்  16 புள்ளி 20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளி திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில்  மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க. எம்.பி. அன்வர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், பள்ளிகளின் தரத்தை உயர்த்தி தமிழகத்தில், அரசு பள்ளிகள் மூடப்படுவதை அரசு தடுக்க வேண்டும் என்று கூறினார். 


"நவோதயா பள்ளிகள் தமிழகத்துக்கு வேண்டாம்" - அ.தி.மு.க. எம்.பி. அன்வர் ராஜா


விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. எம்.பி. அன்வர் ராஜா, தமிழகத்திற்கு நவோதயா பள்ளிகள் வேண்டாம் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்