"3 மாதம் ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டாலும்...குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படாது" - அமைச்சர் காமராஜ் உறுதி

குடும்ப அட்டைகளில் மூன்று மாதம் தொடர்ந்து பொருட்கள் வாங்கப்படவில்லை என்றாலும் அட்டைகள் ரத்து செய்யப்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்
3 மாதம் ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டாலும்...குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படாது - அமைச்சர் காமராஜ் உறுதி
x
கேள்வி நேரத்தின் போது பேசிய சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன், மூன்று மாதங்களுக்கு பொருட்கள் வாங்காவிட்டால் குடும்ப  அட்டையை ரத்து செய்ய வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், அறிவுறுத்தியுள்ளதாக பேசினார். தமிழகத்தில் கட்டட வேலை, சாலை வேலை, நூற்பாலை வேலைக்கு செல்லக்கூடியவர்கள் இரண்டு மாதங்கள் தங்கி வேலைபார்ப்பார்கள் எனவும், மீண்டும் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் போது அட்டை ரத்து செய்யப்பட  வாய்ப்பிருப்பதாகவும் மா.சுப்பிரமணியன்  பேசினார்.

அதற்கு பதிலளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், அறிவுரை மட்டுமே வழங்கினார் எனவும், அது கொள்கை முடிவல்ல எனவும் தெரிவித்தார். 

 மத்திய அமைச்சரின் அறிவுரை பின்பற்றப்படாது எனவும் பழைய நிலையே தொடரும் எனவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்