ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் புகார் - சட்டப்பேரவையில் காரசார விவாதம்

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அரசு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் புகார் - சட்டப்பேரவையில் காரசார விவாதம்
x
சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், அரசு தனக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து இருப்பதாக கூறினார். 

திருடு போன சிலைகளை மீட்பது அரசின் கடமை என்றும். ஆனால் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காமல் அதற்கு மாறாக அரசு செயல்படுவது ஏன் ? என்றும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி  கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், பொன் மாணிக்கவேல் கோரிய 320 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான கார், அலுவலகத்திற்கு 35 லட்ச ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

அப்போது, சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகளை மாற்றினால் தலைமைச்செயலாளர், டி.ஜி.பியை நேரில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்படும் என உயர்நீதிமன்றம் கூறுவதற்கான காரணம் என்ன? என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 
 
இதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால், நீதிமன்றம் சில கேள்விகளை கேட்கும்  என்றும், அதற்கான விவரங்களை தமிழக அரசு கொடுத்திருக்கிறது என்பதால் அதுகுறித்த விவாதம் வேண்டாம் என்றும் கூறினார். 

நீதிமன்ற வழக்கை சட்டப்பேரவையில் ஒரு அளவுக்கு தான் விவாதிக்க  முடியும் என கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் தான் களவு போன சிலைகள் அதிகளவில் மீட்கப்பட்டுள்ளது என்றார். 

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான விவாதம் காரணமாக அவையில் அனல் பறந்தது. 

சிலை தடுப்பு பிரிவு - காரசார விவாதம்

அரசு உரிய ஒத்துழைப்பு தரவில்லை என பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் புகார் - ஸ்டாலின் 

ஐ.ஜி.க்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காமல் அதற்கு மாறாக அரசு செயல்படுவது ஏன் ? - ராமசாமி

320 காவலர்கள் நியமனம், அவர்களுக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர்

அதிகாரிகளை மாற்றினால் தலைமைச்செயலாளர், டி.ஜி.பி நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியது ஏன்? -  ஸ்டாலின்

நீதிமன்றம் கேட்டதற்கு தேவையான விளக்கங்களை தமிழக அரசு கொடுத்திருக்கிறது - சபாநாயகர்

திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் தான் அதிக சிலைகள் மீட்பு  - முதலமைச்சர் 


Next Story

மேலும் செய்திகள்