ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தீவிரம் - துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்டடோருக்கு சம்மன்
துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி வரும் 28ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
வரும் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் மருத்துவர் சிவக்குமார் மறு விசாரணைக்காகவும், 26 ஆம் தேதி அப்பல்லோ மருத்துவர் நளினி, செவிலியர் பிரேமா ஆண்டனி ஆகிய இருவர்களையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
27 ஆம் தேதி ஐ.ஏ.எஸ் அதிகாரி ராமலிங்கத்திடம் மறு விசாரணையும், ஐ.ஓ.பி வங்கி முன்னாள் மேலாளர் மகாலட்சுமி, மருத்துவர்கள் ஜெயஸ்ரீகோபால், சாந்தாரம், ராமச்சந்திரன் ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும் எனவும் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 28 ஆம் தேதி துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி மற்றும் உளவுப்பிரிவு ஐ.ஜி.சத்தியமூர்த்தி ஆஜராகவும், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
Next Story