முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலமாக உள்ளார் - தமிழிசை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலமுடன் இருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலமாக உள்ளார் - தமிழிசை
x
வாஜ்பாய் நலமாக உள்ளார் - தமிழிசை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலமுடன் இருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எயிம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாயின் உறவினர்கள், உதவியாளர் மற்றும் விஜய்கோயலிடம் கேட்டு அறிந்ததாக தெரிவித்தார்.

 


வாஜ்பாய் நலமுடன் உள்ளார் - மதிமுக பொதுசெயலாளர் வைகோ

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலமுடன் உள்ளதாக மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த தலைவர் வாஜ்பாய். மதசார்பற்ற தன்மையை பாதுகாத்தவர்...ஈழ தமிழர்களுக்கு உதவிகள் செய்த தலைவர்...வாஜ்பாய் உடல்நிலை சீராக உள்ளது - எய்ம்ஸ்

நோய் தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு அவர் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை அவர் மருத்துவமனையில் இருப்பார் எனவும், எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வாஜ்பாய் நலம் பெற பாஜகவினர் சிறப்பு வழிபாடு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலம் பெற வேண்டி உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் பாஜகவினர் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். சிறுநீரக தொற்று காரணமாக, அவதிப்பட்டு வந்த வாஜ்பாய், நேற்று, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நலம் பெற வேண்டி, ஹவன் என்னும் சிறப்பு யாகம் செய்து பாஜகவினர் வழிபட்டனர். 
Next Story

மேலும் செய்திகள்