ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த வன்முறை, பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த வன்முறை, பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்
x
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்தமாதம் நடைபெற்ற 100 வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசாரின் துப்பாக்கிச்  சூட்டில் 13 பேர் பலியானார்கள். கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக 200 க்கும் அதிகமானோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை மற்றும் தூத்துக்குடி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ரகுமான், முகமது அனஸ், முகமது இஸ்ரப், வேல்முருகன், சரவணன், சோட்டையன் ஆகிய 6 பேர் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தூத்துக்குடி சிப்காட் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்