இஎம்ஐக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தவணை உரிமை காலத்தில் கடன் செலுத்தாத வங்கி கணக்குகளை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்ற இடைக்கால உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
x
ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையிலான 6 மாத தவணையுரிமை காலத்தில், வட்டிக்கு வட்டிக்கு வசூலிக்கும் விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது,. அப்போது, மத்திய அரசு மற்றும் வங்கிகள் கூட்டமைப்பு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது,. Gfx card 3
அப்போது, பல்வேறு துறைகளில் நிலவும் கடன் தவணை பிரச்சினைகளுக்கு  தீர்க்கமான தீர்வுகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று  நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தவனை உரிமை காலத்தில் கடன் செலுத்தாத வங்கி கணக்குகளை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்ற இடைக்கால உத்தரவு தொடரும்  எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையிலான 6 மாத தவணையுரிமை காலத்தில், வட்டிக்கு வட்டிக்கு வசூலிக்கும் விவகாரம் தொடர்பாக தீர்க்கமான முடிவை எடுக்க கால அவகாசம் அளிப்பதாக கூறிய நீதிபதிகள்  வழக்கு விசாரணையை இனி ஒத்திவைக்க கோரக் கூடாது என்று தெரிவித்தனர்,.

Next Story

மேலும் செய்திகள்