வங்கிக்கடன் தவணை தொகையை ரத்து செய்ய கோரிய மனுக்கள் விசாரணை - வழிகாட்டுதல்களை அறிவிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல்

வங்கிகளுக்கான கடன் செலுத்தும் விவகாரத்தில், ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையிலான 6 மாத தவணை காலத்தில், வட்டிக்கு வட்டி வசூலிப்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை அறிவிக்க வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கிக்கடன் தவணை தொகையை ரத்து செய்ய கோரிய மனுக்கள் விசாரணை - வழிகாட்டுதல்களை அறிவிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல்
x
கொரோானா ஊரடங்கினால் ஏற்பட்ட வருமான இழப்பை ஈடு செய்ய, வங்கிக் கடன்களுக்கான தவணைத்தொகையை ரத்து செய்ய கோரி கஜேந்திர சர்மா உள்ளிட்டோர், உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

* இந்த மனுக்களை விசாரித்த, உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு, தவணை உரிமை காலத்தை மத்திய அரசு அறிவித்து இருந்தால் அதனுடைய பலன் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளது. 

* இது வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான விவகாரம் என மத்திய அரசு கூறுவது ஏன் என, உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

* இந்த விவகாரத்தை வங்கிகளிடம் மட்டும் விட்டுவிட முடியாது என்றும் வட்டிக்கு வட்டி வசூலிப்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை அறிவிக்கவும்  வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

* இறுதியாக, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் முதல் வாரத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது. 

Next Story

மேலும் செய்திகள்