"யாதவ குலத்தோருக்கு திருப்பதி ஏழுமலையானின் முதல் தரிசனம்" - வாரிசு அடிப்படையில் யாதவர்களை நியமிக்க அரசு உத்தரவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் அதிகாலை 2.30 மணிக்கு நடைபெறும் சுப்ரபாத சேவைக்கு கோயில் அர்ச்சகர்களை அழைத்து வருவது சன்னதி யாதவ குலத்தவரின் வம்சாவழி சம்பிரதாயமாக இருந்து வந்தது.
யாதவ குலத்தோருக்கு திருப்பதி ஏழுமலையானின் முதல் தரிசனம் - வாரிசு அடிப்படையில் யாதவர்களை நியமிக்க அரசு உத்தரவு
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் அதிகாலை 2.30  மணிக்கு நடைபெறும் சுப்ரபாத சேவைக்கு கோயில் அர்ச்சகர்களை அழைத்து வருவது சன்னதி யாதவ குலத்தவரின் வம்சாவழி சம்பிரதாயமாக இருந்து வந்தது. கடந்த 1996ஆம் ஆண்டு இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நடைமுறை மீண்டும் கடைபிடிக்கப்படும் என்றும் வாரிசு அடிப்படையில் யாதவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இதையடுத்து, திருப்பதி அடிவாரத்தில் உள்ள நடைபாதையில் யாதவ குலத்தைச் சேர்ந்தவர்கள் தேங்காய் உடைத்து  ஆந்திர அரசுக்கு நன்றி தெரிவித்தனர்

Next Story

மேலும் செய்திகள்