விசாகப்பட்டினத்தில் விஷவாயி தாக்கியதன் எதிரொலி - மரம், செடி, கொடிகள் கருகிய சோகம்

விசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவு காரணமாக மனிதர்கள், விலங்குகள் உயிரிழந்துள்ள நிலையில் மரம் செடி கொடிகள் கூட கருகிய உள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
விசாகப்பட்டினத்தில் விஷவாயி தாக்கியதன் எதிரொலி - மரம், செடி, கொடிகள் கருகிய சோகம்
x
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எல்ஜி பாலிமர் கேஸ் நிறுவனத்தில் வாயு கசிவு ஏற்பட்டு விஷவாயு தாக்கி 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 300க்கும் மேற்பட்டோர் தற்போது வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நிறுவனத்தை மூட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விஷவாயு தாக்கம் மனிதர்கள் மட்டுமல்லாது அப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகளும் முற்றிலுமாக கருகிய நிலையில் காணப்படுகின்றன. மரம், செடி, கொடிகளை விஷவாயு தாக்கியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்