நிர்பயா வழக்கு - மார்ச் 20-ல் 4 பேருக்கு தூக்கு

நிர்பயா வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கு மார்ச் 20 -ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற புதிய தேதியை அறிவிக்க கோரிய மனு மீதான விசாரணை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ராணா அமர்வு முன் நடைபெற்றது.

அப்போது பவனின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதால், வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என வாதிடப்பட்டது. 

அனைத்து சட்ட, அரசியல் தீர்வுகளையும்  நிர்பயா குற்றவாளிகள் பயன்படுத்திவிட்டதால், மரண தண்டனையை நிறைவேற்ற தேதி குறிக்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து மார்ச் 20-ம் தேதி அதிகாலை ஐந்தரை மணிக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும் சிறைவிதிகளுக்கு உட்பட்டு குற்றவாளிகள் அக்‌ஷய் குமார், பவன் குமாரை சந்திக்க வழக்கறிஞருக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்