ஏழுமலையான் கோயிலில் கருட சேவை உற்சவம் - தங்க கருட வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தை மாத பௌர்ணமியை முன்னிட்டு கருடசேவை நடைபெற்றது.
ஏழுமலையான் கோயிலில் கருட சேவை உற்சவம் - தங்க கருட வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தை மாத பௌர்ணமியை முன்னிட்டு கருடசேவை நடைபெற்றது. இதை முன்னிட்டு தேவி பூதேவி சமேதராக மலையப்பசாமி தங்க கருட வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாகனத்திற்கு முன்பாக ஜீயர்கள் 4000 திவ்விய பிரபந்தம் பாடி முன்னே செல்ல, கருட வாகனத்தில் மலையப்பசாமி  பின்னே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது, பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து பக்தி பரவசம் பொங்க கோவிந்தா கோஷங்களுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்