நிர்பயா பாலியல் கொலை வழக்கு : தூக்கை ரத்து செய்ய முடியாது - டெல்லி உயர்நீதிமன்றம்

நிர்பயா பாலியல் கொலை வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங்குக்கு விதிக்கப்பட்ட தூக்கை ரத்து செய்ய முடியாது என, டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
x
நிர்பயா பாலியல் கொலை வழக்கில் குற்றவாளி முகேஷ்  சிங்குக்கு விதிக்கப்பட்ட தூக்கை ரத்து செய்ய முடியாது என, டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லி பட்டியாலா நீதிமன்றம் பிறப்பித்த தூக்கு தண்டனை உத்தரவுக்கு எதிராக குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது திகார் சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல் ராகுல் மெஹ்ரா, ஒரு மரண குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்த பின்னர் குற்றவாளிகளுக்கு 14 நாட்கள் அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விதிக்கு நாங்கள் கட்டுப்பட்டிருப்பதால், நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்குப் பிறகுதான் தண்டனையை நிறைவேற்ற  முடியும் என்றார். இதையடுத்து, முகேஷ்சிங்கின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க  மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், கீழமை நீதிமன்றத்தை அணுகுமாறு முகேஷ்சிங்கிற்கு அறிவுறுத்தினர்.  

Next Story

மேலும் செய்திகள்