"உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு : குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று தீர்ப்பு "

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
x
* உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், 2017ஆம் ஆண்டு, தன்னை பங்கர்மவ் தொகுதி எம்.எல்.ஏ. குல்தீப்சிங்  செங்கார் கடத்தி சென்று  பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். தனக்கு 17 வயது என்றும் அந்த பெண், தனது புகாரில் தெரிவித்திருந்தார். 

* இது தொடர்பாக , எம்.எல்.ஏ. குல்தீப்சிங்  செங்காரை போலீசார் கடந்த ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். 

* இதையடுத்து குல்தீப் சிங் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார். 

* இந்த  பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரித்தது.

* இந்நிலையில், கடந்த ஏப்ரல் 3ஆம்தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சட்டவிரோத ஆயுத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலில் அவர் உயிரிழந்தார்.

* இதனிடையே, கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி, பாதிக்கப்பட்ட இளம்பெண், உறவினர்களுடன் சென்றுகொண்டிருந்த கார் மீது லாரி  மோதியது.

* இந்த விபத்தில் பெண்ணின் உறவினர்கள் 2 பேர் உயிரிழக்க, படுகாயமடைந்த, இளம்பெண், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

* இந்த விபத்து தொடா்பாக குல்தீப் சிங்  செங்கார் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டது

* பாதிக்கப்பட்ட பெண்ணின் கோரிக்கையை ஏற்று  வழக்கு விசாரணையை உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி  மாவட்ட நீதிமன்றத்துக்கு, உச்சநீதிமன்றம் மாற்றியது. 

* இந்த வழக்கை, டெல்லி நீதிமன்ற நீதிபதி கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் நாள்தோறும் விசாரித்து வந்தார்.

* ஆகஸ்ட் 9ஆம் தேதி செங்கார் மீது ஆள்கடத்தல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

* அதேபோல இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசி சிங் என்பவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

* இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று டெல்லி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். 

* தண்டனை விவரங்கள் 17ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சசிசிங் என்பவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்