புதிய தலைமை நீதிபதியாக பாப்டேவை நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்க, மத்திய அரசுக்குஇ தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பரிந்துரை செய்துள்ளார்.
புதிய தலைமை நீதிபதியாக பாப்டேவை நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை
x
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகோய், வரும் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி பதவி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் தமக்கு அடுத்தப்படியாக தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை நியமிக்க மத்திய அரசுக்கு ரஞ்சன் கோகோய் பரிந்துரை செய்துள்ளார். இது வழக்கமான ஒன்று தான் என கூறுப்படுகிறது. புதிய தலைமை நீதிபதி நியமனம் தொடர்பாக குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிப்பார். இதனைத் தொடர்ந்து வரும் நவம்பர் 19 ஆம் தேதி புதிய நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் பதவி பிரமாணம் செய்து வைப்பார். பாப்டே தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் நிலையில், அவர் உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக இருப்பார்.  உச்சநீதிமன்றத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ள எஸ்.ஏ. பாப்டே, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள மகாராஷ்டிர தேசிய சட்டப் பல்கலைக் கழக வேந்தராகவும் பணியாற்றியவர். இவர் வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி ஓய்வுபெறுகிறார்.

Next Story

மேலும் செய்திகள்