பொருளாதார நோபல் பரிசு அறிவிப்பு : கணவன், மனைவி இருவருக்கும் நோபல் பரிசு

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்தியரான அபிஜித் பேனர்ஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார நோபல் பரிசு அறிவிப்பு : கணவன், மனைவி இருவருக்கும் நோபல் பரிசு
x
1961ல் கொல்கத்தாவில் பிறந்தவர் அபிஜித் பேனர்ஜி.. இவரது  பெற்றோர் தீபக் பேனர்ஜி - நிர்மலா பேனர்ஜி. இவர்கள் இருவருமே பொருளாதாரத்துறையில் தனித்துவம் பெற்றவர்கள். தன் பெற்றோர் வழியில் பொருளாதாரத்துறையில் தடம் பதித்த அபிஜித் பேனர்ஜி, கொல்கத்தாவிலும், டெல்லியிலும் தன் கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் முனைவர் பட்டத்தை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்த அபிஜித், அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் சர்வதேச பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். பொருளாதார முன்னேற்றமே இலக்கு என கொண்டு செயல்பட்டு வரும் அபிஜித், இத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளையும்  பெற்றுள்ளார். அப்துல் லதீஃப் ஜமீல் வறுமை நடவடிக்கை ஆய்வகத்தின் துணை நிறுவனர் ஆவார். இந்த ஆய்வகம் வறுமை ஒழிப்புக்கான புதிய கண்டுபிடிப்புகளுக்காகத் தொடங்கப்பட்டது. இதே துறையில் சிறந்து விளங்கிய எஸ்தர் டப்லோவை திருமணம்  செய்து கொண்டார் அபிஜித். கணவன், மனைவி இருவரும் பொருளாதாரத்துறையில் வல்லுநர்களாக விளங்கி வரும் நிலையில் இருவருக்கும் தற்போது நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்