பிரபலங்கள் மீது தேசப் பாதுகாப்பு வழக்கு : புகார் பதிவு செய்ய காரணமான வழக்கறிஞர் ஓஜா

நாட்டில் குழு வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 50 பிரபலங்கள் மீது பிகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபலங்கள் மீது தேசப் பாதுகாப்பு வழக்கு : புகார் பதிவு செய்ய காரணமான வழக்கறிஞர் ஓஜா
x
நாட்டில் குழு வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 50 பிரபலங்கள் மீது பிகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுதிர் குமார் ஓஜா என்கிற வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர் சுதிர் ஓஜா பொது நல வழக்குகளை தாக்கல் செய்து பிரபலமானவர் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கு முன்னர், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி மீது கிரிமினஸ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடவேண்டும் என மனுத் தாக்கல் செய்துள்ளார். பிகார் அரசுக்கு எதிராக பல்வேறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளை தாக்கல் செய்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்