ஆர்பிட்டர் ஆயுளை நீட்டிக்க இஸ்ரோ முடிவு : விக்ரம் லேண்டருடன் தொடர்பு கிடைப்பதில் தாமதம்

நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டு உள்ள சந்திரயான் - 2 விண்கலத்தின் ஆர்பிட்டரின் ஆயுள் காலத்தை 7 ஆண்டுகளாக நீட்டிக்க இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
ஆர்பிட்டர் ஆயுளை நீட்டிக்க இஸ்ரோ முடிவு : விக்ரம் லேண்டருடன் தொடர்பு கிடைப்பதில் தாமதம்
x
கடந்த ஜூலை 22 ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் - 2 விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவின் சுற்று வட்டப்பாதையில், தற்போது பயணித்து வருகிறது.  இதற்கிடையே, விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு கிடைக்க தாமதம் ஆவதால், ஆர்பிட்டரின் வாழ்நாளை 7 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டு, நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணிக்கும். இவ்வாறு நிலவின் நீள் வட்ட பாதையில் தொடர்ந்து பயணித்து, நிலவு தொடர்பான தகவல்களையும், நிலவின் மேற்பரப்பில் நிலவும் தட்டவெப்ப நிலை குறித்த தகவல்களையும் ஆர்பிட்டர் பூமிக்கு அனுப்பி வைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்