"சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறந்து விடப்படும்" - தெலுங்கு கங்கை திட்ட பொறியாளர் தகவல்

ஆந்திராவின் கண்டலேறு நீர் தேக்கத்தில் இருந்து இன்னும் 17 நாட்களில் சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர் திறந்துவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறந்து விடப்படும் - தெலுங்கு கங்கை திட்ட பொறியாளர் தகவல்
x
திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கு - கங்கை கால்வாய் நீர் மேலாண்மை திட்ட கண்காணிப்பு பொறியாளர் வெங்கடேஸ்வர ராவ், இந்த தகவலை வெளியிட்டார். ஸ்ரீசைலம் அணையில் இருந்து சோமசீலா நீர் தேக்கத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரில் 6 ஆயிரம் கன அடி நீர், அங்கிருந்து கண்டலேறு நீர் தேக்கத்திற்கு திறந்து விடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்