ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப. சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
பதிவு : ஆகஸ்ட் 20, 2019, 04:40 PM
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த 2007 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து  305 கோடி ரூபாய் நிதியை பெற்றது. இதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்திய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாக புகார் எழுந்தது. இதில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. 

இவ்வழக்கில் முன்ஜாமின் வழங்க கோரி ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுனில் கவுர்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3657 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

391 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

338 views

ரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்

சென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

157 views

பிற செய்திகள்

வாக்காளர் விவரங்களை சரிபார்க்க - வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலையில் அரசு கல்லூரி மாணவிகள் திடீரென நடனமாடினர்.

18 views

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை முயற்சி: "குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" - நெல்லை மாவட்ட ஆட்சியர்

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயலுபவர்கள் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் எச்சரித்துள்ளார்.

83 views

3 மாதத்தில் 16 கொலை சம்பவங்கள் - போலீசார் 5 பேர் அதிரடி இடமாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 5 போலீசார் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

84 views

மேற்கூரை ஓடுகள் உடைந்து சேதம் - அங்கன்வாடி மைய கட்டடத்தின் அவலம்

ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி அங்கன்வாடி மைய கட்டடத்தின் மேற்கூரைகள் உடைந்து சேதம் அடைந்து கிடப்பதால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

25 views

இனிவரும் அனைத்து தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் மட்டுமின்றி வருகின்ற அனைத்து தேர்தலிலும் இனி அதிமுகவே வெற்றி பெறும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

60 views

5 பவுன் நகை மற்றும் செல்போனை தவற விட்ட பெண் - சிடிவி உதவியுடன் மீட்டு ஒப்படைத்த போலீசார்

புதுச்சேரி அருகே பெண் தவறவிட்ட 5 பவுன் தங்க நகையை சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.