மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பலி : மின்கம்பியில் சாய்ந்த கொடி கம்பத்தை தொட்டபோது விபத்து

கர்நாடக மாநிலம் கொப்பல் நகரில், கொடியை இறக்கும்போது, மின்சாரம் தாக்கிய விபத்தில், மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பலி : மின்கம்பியில் சாய்ந்த கொடி கம்பத்தை தொட்டபோது விபத்து
x
கர்நாடக மாநிலம் கொப்பல் நகரில், கொடியை இறக்கும்போது, மின்சாரம் தாக்கிய விபத்தில், மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பனிகட்டே பகுதியில் உள்ள பள்ளியில், வாளியில் மண் நிரப்பி கொடிக் கம்பம் நட்டு கொடியேற்றி உள்ளனர். அந்தக் கொடிக் கம்பம் அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பியில் சாய்ந்துள்ளது. இதை அறியாமல், கொடிக் கம்பத்தை பிடித்த மாணவர்கள் 5 பேர் அடுத்தடுத்து உடல் கருகி உயிரிழந்தனர். ஒருவர் மீது ஒருவர் கருகி உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே, மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்