ரயில்நிலையத்தில் வலியால் துடித்த கர்ப்பிணி : கர்ப்பிணிக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர் கைது

மும்பை விரார் ரயில் நிலையத்தில், வலியால் துடித்த ஏழு மாத கர்ப்பிணியை ஏற்றிக் கொண்டு, நடைபாதையில் ஆட்டோ இயக்கிய குற்றத்திற்காக ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ரயில்நிலையத்தில் வலியால் துடித்த கர்ப்பிணி : கர்ப்பிணிக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர் கைது
x
மும்பை விரார் ரயில் நிலையத்தில், வலியால் துடித்த ஏழு மாத கர்ப்பிணியை ஏற்றிக் கொண்டு, நடைபாதையில் ஆட்டோ இயக்கிய குற்றத்திற்காக ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு, குறை பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது. நோக்கம் நல்லது என்றாலும், ஆட்டோ ஓட்டுநரின் செயலால் பலர் காயம் அடைந்ததாக தெரிகிறது. இதனால் விதிமீறி செயல்பட்டதாகக் கூறி அந்த ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். இனி, விதிமுறைகளை மீற கூடாது என அறிவுரை வழங்கிய காவல்துறையினர், அந்த ஆட்டோ ஓட்டுநரை விடுவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்