முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மரணம் : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 67.
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மரணம் : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
x
சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த சுஷ்மா ஸ்வராஜ் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில் நேற்று இரவு சுஷ்மா ஸ்வராஜின் உடல் திடீரென மோசமடைந்தது. இதனையடுத்து அவர்  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஸ்கோயல்  உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி, மாரடைப்பு காரணமாக நேற்று இரவு பதினொரு மணி அளவில் சுஷ்மா உயிரிழந்தார். 

இதையடுத்து, டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் எடுத்து செல்லப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் பாஜக தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்