மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை

ஜம்மு- காஷ்மீரில் திடீரென்று ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றம் நிலவி வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை
x
ஜம்மு-  காஷ்மீரில் திடீரென்று ராணுவ வீரர்கள்  குவிக்கப்பட்டு வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பூஞ்ச் உள்ளிட்ட பல பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பாதுகாப்பு படையினர் ரோந்து , கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏ.டி.எம். மையங்களிலும், பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் அதிக கூட்டம் காணப்படுகிறது. ஸ்ரீநகரிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் காஷ்மீர் விவகாரம் குறித்து அதிரடி முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்