நோயாளியுடன் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ்... உதவிக்கரம் நீட்டிய பொதுமக்கள், போலீசார்...

நோயாளியுடன் வந்த 108 ஆம்புலன்ஸ் திடீரென சாலையில் பழுதாகி நின்றபோது, பொதுமக்கள் மற்றும் போலீஸார் மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து உதவியுள்ளனர்.
நோயாளியுடன் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ்... உதவிக்கரம் நீட்டிய பொதுமக்கள், போலீசார்...
x
விழுப்புரம் மாவட்டம், கிளியனூரை சேர்ந்த லட்சுமி என்பவர், தைராய்டு பாதிப்பால் மூச்சு விட சிரமப்பட்டார். இதையடுத்து, 108 ஆம்புலன்சில் தமது மகன், மகள் ஆகியோருடன் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது புதிய பேருந்து நிலையம் அருகே திடீரென வாகனம் பழுதாகி சாலையின் நடுவே நின்றது. அவ்வழியே வந்தவர்கள் ஆம்புலன்ஸை தள்ள முயற்சித்த போது, வாகனத்தை நகர்த்த முடியவில்லை.  தகவல் அறிந்த போலீசார், தனியார் ஆம்புலன்ஸை வரவழைத்து, சிகிச்சைக்காக வந்தவரை, அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்