சுகாதார துறையில் கேரளா தொடர்ந்து முன்னிலை : கடந்த ஆண்டைவிட பஞ்சாப், தமிழகம் பின்னடைவு

நாட்டிலேயே சுகாதாரத் துறையில், அனைத்து விதத்திலும் சிறந்து விளங்கி கேரளா முதலிடத்தில் உள்ளது.
சுகாதார துறையில் கேரளா தொடர்ந்து முன்னிலை : கடந்த ஆண்டைவிட பஞ்சாப், தமிழகம் பின்னடைவு
x
நாட்டிலேயே சுகாதாரத் துறையில், அனைத்து விதத்திலும் சிறந்து விளங்கி கேரளா முதலிடத்தில் உள்ளது. சுகாதார துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் குறித்து நிதி ஆயோக்கின் இரண்டாவது தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது. இதில், கேரளா முதலிடத்திலும், ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா மாநிலங்கள் இடம் பிடித்துள்ளன. 9 வது இடத்தில் தமிழகம், அடுத்து தெலங்கானா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன. கடந்த ஆண்டு வெளியான பட்டியலில், முதல் மூன்று இடங்களில் இருந்த பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களும் மிகவும் பின்தங்கியுள்ளன. உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள், மிகவும் பின்தங்கி இருப்பதாக தரவரிசைப் பட்டியல் கூறுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்