பிரதமர் மோடி இன்று திருப்பதி வருகை

பிரதமர் மோடி இன்று, இலங்கை சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, மாலை 4.30 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் வருகிறார்.
பிரதமர் மோடி இன்று திருப்பதி வருகை
x
பிரதமர் மோடி இன்று, இலங்கை சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, மாலை  4.30 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் வருகிறார். அவரை ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், பாஜக முக்கிய நிர்வாகிகள்  வரவேற்க உள்ளனர். இதையடுத்து, மாலை 5 மணியளவில் ரேணிகுண்டா விமான நிலையம் அருகே  பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அங்கிருந்து காரில் புறப்படும் பிரதமர் மோடி, இன்று மாலை 6 மணிக்கு திருமலைக்கு சென்று, ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். பிரதமர் வருகையை ஒட்டி திருப்பதி எஸ்பி அன்பு ராஜன் தலைமையில் தேசிய பாதுகாப்புப்படை, மாநில புலனாய்வு துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்