திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிக பக்தர்கள் கூட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிக கூட்டம் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிக பக்தர்கள் கூட்டம்
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிக கூட்டம் காரணமாக பக்தர்கள் 
சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் வைகுண்டம் காத்திருப்பு அறையில் 31 அறைகளும் நிரம்பி  மூன்று கிலோமீட்டர்  தூரமுள்ள ராம்பகிஜா  பக்தர்கள் ஓய்வு அறை வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இன்று காலை சர்க்கார் சகஸ்கர கலச அபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள்  காலை ஒன்பது மணிக்கு பிறகே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று இலவச தரிசனத்தில் மட்டுமே சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், திருப்பதியில் இருந்து திருமலைக்கு வந்து செல்லக்கூடிய 2 மலைப்பாதைகளில் 24 மணி நேரமும் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்