கேரளாவில் உள்ள 44 ஆறுகளில் பயன்படுத்தப்படுவது 300 டி.எம்.சி மட்டுமே - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கேரள அமைச்சர்

கேரளாவில் உள்ள 44 ஆறுகளில் 3 ஆயிரம் டி.எம்.சி அளவிற்கு தண்ணீர் இருந்தாலும் அவற்றில் 300 டி.எம்.சி மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள 44 ஆறுகளில் பயன்படுத்தப்படுவது 300 டி.எம்.சி மட்டுமே - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கேரள அமைச்சர்
x
கேரளாவில் உள்ள 44 ஆறுகளில் 3 ஆயிரம் டி.எம்.சி அளவிற்கு தண்ணீர் இருந்தாலும், அவற்றில் 300 டி.எம்.சி மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கிருஷ்ணன் குட்டி இந்த தகவலை வெளியிட்டார். ஆயிரத்து 500 டி.எம்.சி., தண்ணீர் பயன்படுத்துவதற்கு வாய்ப்பிருந்தும் கடந்த 35 ஆண்டுகளாக அவ்வாறு பயன்படுத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.முல்லை பெரியாறு பரம்பிக்குளம் ஆழியாறு என தமிழகத்திற்கும் கேரளாவுக்கும் இடையே நீண்ட காலமாக நதிநீர் பிரச்சினை நிலவி வரும் நிலையில் கேரளாவில் தண்ணீர் பயன்படுத்தப்படாமல் வீணாவதாக அமைச்சர் வெளியிட்ட தகவல், தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்