கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை : "இழப்புகளை சமாளிக்க இந்தியா தயார்" - ரவீஸ் குமார் தகவல்

ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா வழங்கிய 6 மாத சலுகை காலம் முடிவடைந்த நிலையில், இதனால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க இந்தியா தயாராகவே உள்ளது என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறியுள்ளார்.
கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை : இழப்புகளை சமாளிக்க இந்தியா தயார் - ரவீஸ் குமார் தகவல்
x
ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா வழங்கிய 6 மாத சலுகை காலம் முடிவடைந்த நிலையில், இதனால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க இந்தியா தயாராகவே உள்ளது என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறியுள்ளார். ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்த நிலையில், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் 6 மாத காலம் சலுகை வழங்கப்பட்டது. அந்த சலுகை முடிவடையும் நிலையில், இதனால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க பிற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாக ரவீஸ் குமார் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்