கள்ள ஓட்டு பதிவான விவகாரம் : மார்க்சிஸ்ட் கம்யூ. மீது கேரள எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

கேரளாவில் கள்ள ஓட்டு பதிவு செய்த விவகாரம் மூலம் மார்க்சிஸ்ட் கட்சியின் உருவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதை மறைக்கவே, அக்கட்சி தேர்தல் ஆணையம் மீது பாய்வதாக கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா குற்றம் சாட்டியுள்ளார்.
கள்ள ஓட்டு பதிவான விவகாரம் : மார்க்சிஸ்ட் கம்யூ. மீது கேரள எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு
x
கேரளாவில் கள்ள ஓட்டு பதிவு செய்த விவகாரம் மூலம் மார்க்சிஸ்ட் கட்சியின் உருவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதை மறைக்கவே, அக்கட்சி தேர்தல் ஆணையம் மீது பாய்வதாக கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ரமேஷ் சென்னிதாலா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கேரளாவில் ஆட்சியில் இருப்பவர்கள் சட்டத்தை மீறுவது ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதற்கு சமமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  இந்திய தண்டனை சட்டத்தின் படி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முற்படும்போது ஆணையத்தை அச்சுறுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சி செயல்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது போன்ற செயல்பாடுகளை அக்கட்சி கைவிட வேண்டும் எனவும் ரமேஷ் சென்னிதாலா  தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்