நள்ளிரவு வரை வாக்களித்த ஆந்திர வாக்காளர்கள்...
பதிவு : ஏப்ரல் 12, 2019, 11:34 AM
ஆந்திர மாநிலத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால், பல வாக்குச்சாவடியில் நள்ளிரவு 12 மணி வரை வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று காலை 7 மணி முதல் 25 மக்களவை மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கான  வாக்குப்பதிவு நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பல இடங்களில் இயங்காததால், காலை 9 மணி வரை நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு தொடங்கவில்லை. விஜயநகர் மாவட்டத்தில் பகல் 12 மணிவரை மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரம் ஒரு சாவடியில் இயங்கவில்லை. இதேபோல் குண்டூர் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் பிற்பகல் 3 மணிக்கு மேல் தான் வாக்குப்பதிவு தொடங்கியது. இதன் காரணமாக மாலை 6 மணி வரை வாக்குச்சாவடிக்கு வந்து காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள்  இரவு 12 மணி வரை வாக்களிக்க அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடு செய்தனர். கோதாவரி, குண்டூர் , நெல்லூர், பிரகாசம், கர்னூல், விஜயவாடா மாவட்டங்களில், மாலை 6 மணிக்கு மேல் 6 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் இரவு 9 மணிக்கு மேல் 720 வாக்குச்சாவடிகளிலும் 10 மணிக்கு மேல் 250 வாக்குச் சாவடிகளிலும் 11:30 மணிக்கு மேல் 49 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

140 views

ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்

மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

11315 views

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

626 views

பிற செய்திகள்

இலங்கையில் நடந்த முக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்கள்

இலங்கையில் நடந்த முக்கிய குண்டு வெடிப்பு சம்பவங்களை தற்போது பார்க்கலாம்...

31 views

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி : புதுச்சேரி தேவாலயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதலை தொடர்ந்து புதுச்சேரியில் நகரப்பகுதியில் உள்ள பல்வேறு கிறிஸ்துவ தேவாலயங்களில் சோதனை நடைபெற்றது.

15 views

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி : ராமநாதபுரம் கடற்கரையில் தூப்பாக்கி எந்திய போலீசார் ரோந்து

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை முழுவதும் கடற்படையினர் கடலோர காவல் படையினர் மற்றும் தமிழக கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

20 views

இறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு

தமிழக அளவில் இறகுபந்து விளையாட்டுக்கான லீக் போட்டிகள் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.

63 views

நாடு முழுவதும் ரூ. 3,093 கோடி மதிப்பு பணம் பொருட்கள் பறிமுதல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு நேற்று வரை நாடு முழுவதும் மொத்தம் ரூ.3093 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

11 views

ஆங்கில மருந்து நிறுவனங்களுக்கு அரசியல்வாதிகள் துணை போகின்றனர் - பிரேம்நாத்

கிருஷ்ணகிரியில், சித்தா, ஆயுர்வேதம்,யுனானி, இயற்கை மருத்துவர்கள் சங்கம் மற்றும் மூலிகை ஆராய்ச்சி மையம் சார்பில் உலகசித்தர்கள் தினம் நடைபெற்றது

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.