பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்..

காஷ்மீரில் தீவிரவாதிகள் - இந்திய ராணுவம் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
x
சோபியான் மாவட்டத்தில் மெமந்தர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த இடத்தை பாதுகாப்பு படை சுற்றி வளைத்தது. இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு தொடர்ந்து தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதேநேரம், பாரமுல்லா மாவட்டம் உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. இந்நிலையில், தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்