மத்திய அரசுக்கு புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் கடிதம்...

புதுச்சேரியில் அசாதாரண சூழல் நிலவுவதால் இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் கடிதம் எழுதியுள்ளார்.
x
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக துணை நிலை ஆளுனர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடந்த 7-ஆம் தேதி கடிதம் எழுதியதாக அதில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கோரிக்கைகள் தொடர்பாக பதில் இல்லாததால் கடந்த 3 நாட்களாக முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் சபாநாயகர் வைத்திலிங்கம் குறிப்பிட்டுள்ளார். முதல்வர், அமைச்சர்கள், உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டு வரும் நிலையில், துணை நிலை ஆளுனர் நேற்று திடீரென டெல்லி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். புதுச்சேரியில் அசாதாரண சூழல் நிலவுவதாக தெரிவித்துள்ள சபாநாயகர் வைத்திலிங்கம், உடனடியாக இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். புதுச்சேரிக்கு இடைக்கால நிர்வாகியை நியமிப்பது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் எனவும் சபாநாயகர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்