வன்முறையில் ஈடுபட்ட 9,193 சங் பரிவார் அமைப்பினர் ? - ஆளுநரிடம் கேரள முதல்வர் விளக்கம்

சபரிமலையில் போராட்ட நிகழ்வுகளை தொடர்ந்து, கேரள மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து, முதலமைச்சர் பினராயி விஜயன், மாநில ஆளுநர் சதாசிவத்திடம் விளக்கமளித்தார்.
வன்முறையில் ஈடுபட்ட 9,193 சங் பரிவார் அமைப்பினர் ? -  ஆளுநரிடம் கேரள முதல்வர் விளக்கம்
x
கேரள ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர், ஆளுநர் சதாசிவத்திடம் அறிக்கை ஒன்றை சமர்பித்தார். அதில், கேரளாவில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக  ஆயிரத்து 137 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 ஆயிரத்து 24 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  அதில் 9 ஆயிரத்து 193 பேர் சங்க் பரிவார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்றும், 
 வன்முறை சம்பவங்களால் 2 கோடியே 32 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.  மேலும் 17 செய்தியாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்