முற்பட்ட வகுப்பினர்களில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு

பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டதிருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
x
நாடு முழுவதும் தற்போது, 50 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 69 சதவிகிதம் அமலில் உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முற்பட்டோர் பிரிவில் இருந்தாலும், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு, 
10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனத்திலும், திருத்தம் கொண்டு வர உள்ளதால், இந்த மசோதா நாளைய தினமே, நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இட ஒதுக்கீடு, 69 லிருந்து 79 சதவிகிதம் வரை, உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்