பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கிறதா?

பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இந்தியாவில் அதிகரித்து வருவது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கிறதா?
x
2016 ஆம் ஆண்டில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக , 29 லட்சம் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கல்வியறிவு, பெண்கள் முன்னேற்றத்தில் முன்னிலையில் இருக்கும் கேரளா மற்றும் டெல்லி மாநிலங்களே, இந்த பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளன.

மற்ற மாநிலங்களை விட இங்கு விழிப்புணர்வு அதிகம் உள்ளதால், அதிக எண்ணிக்கையில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஜார்காண்ட், பீகார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் குறைந்த அளவிலேயே புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு காரணம் அங்கு பெரும்பாலனவர்கள் புகார் அளிப்பதில்லை என்று கூறப்படுகிறது.

2012- ல் டெல்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்திற்கு பிறகு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2012- ல் 2.44 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை, 2014-ல் 3.37 லட்சமாக உயர்ந்தது. பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட புகார்கள் தான் அதில் அதிகம்.

பாலியல் வன்கொடுமை குற்றங்கள் இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 3.12-ஆகவும், அமெரிக்காவில் 38.55-ஆகவும், ஸ்வீடனில் 56.69-ஆகவும் உள்ளதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது. இதற்கு காரணம் அந்த நாடுகளில், பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் புகார் அளிப்பது தான் என்று கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்