நாளை விண்ணில் ஏவப்படுகிறது ஜிசாட்-29 செயற்கைக்கோள் : கஜா புயலால் தாமதம் ஏற்படுமா?

கஜா புயல் திசை மாறினால் ஜி.எஸ்.எல்.வி. ஜி-சாட்-29 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதில் தாமதம் ஏற்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
நாளை விண்ணில் ஏவப்படுகிறது ஜிசாட்-29 செயற்கைக்கோள் : கஜா புயலால் தாமதம் ஏற்படுமா?
x
ஜிசாட் 29 செயற்கைக் கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இஸ்ரோ தலைவர் சிவன், சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவன், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக, நாளை  ஜிசாட்-29 செயற்கைகோள், விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார். 

இந்த செயற்கைகோள் 10 ஆண்டுகளுக்கு சேவை புரியும் என்பதால், எதிர்கால திட்டங்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சிவன் தெரிவித்தார். கடல் மட்டத்தில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் கஜா புயல் நகர்ந்து வருவதால், நாளை ராக்கெட் செலுத்துவதில் எந்த பாதிப்பும் இருக்காது என்று சிவன் தெரிவித்தார். ஒருவேளை, புயலின் திசை மாறினால் ராக்கெட் செலுத்துவதில் தாமதம் ஏற்படும் எனவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்