புதுச்சேரி அரசு தீபாவளி பரிசு அறிவிப்பு...

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான சிகப்பு அட்டை தாரர்களுக்கு ஆயிரத்து 275 ரூபாயும், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு 675 ரூபாயும் வழங்கப்படும் எனவும், இந்தத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்
புதுச்சேரி அரசு தீபாவளி பரிசு அறிவிப்பு...
x
தீபாவளி பண்டிகையையொட்டி, புதுச்சேரி அரசு சார்பில் இலவச அரிசி மற்றும் சர்க்கரை, வேட்டி, சேலைகள் வழங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு  வழங்கப்படும் இலவச அரிசி, சர்க்கரைக்கு பதிலாக 
வறுமைக் கோட்டிற்கு  கீழ் உள்ளவர்களுக்கான சிகப்பு அட்டை தாரர்களுக்கு ஆயிரத்து 275 ரூபாயும், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு 675 ரூபாயும் வழங்கப்படும் எனவும்,  இந்தத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார். இதே போல், இலவச ஆடைக்கு பதிலாக, சிகப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு  ஆயிரம் ரூபாயும்,  ஆதி  திராவிடர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 500 ரூபாயும் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
----

Next Story

மேலும் செய்திகள்