கங்கைக்காக உயிர் துறந்த 2-வது ஜீயர் ஜி.டி. அகர்வால்...

கங்கையை தூய்மைப்படுத்தவும், இயற்கையான நீரோட்டத்தை ஏற்படுத்தவும் வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜீயர் ஜி.டி.அகர்வால் மாரடைப்பால் காலமானார்.
கங்கைக்காக உயிர் துறந்த 2-வது ஜீயர் ஜி.டி. அகர்வால்...
x
* கான்பூர் ஐ.ஐ.டி.யில் பேராசிரியராக பணியாற்றி வந்த ஜி.டி.அகர்வால், கடந்த 2011 ஆம் ஆண்டு தமது பணியை துறந்துவிட்டு, துறவறம் பூண்டார். கங்கை நதியை தூய்மைப்படுத்த வலியுறுத்தி  ஜூன் 22-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு  அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

* உண்ணாவிரதத்தின் போது தேனும், நீரும் குடித்து வந்த அவர், கடந்த செவ்வாய் கிழமை செய்தியாளர்களிடம் பேசும் போது, கங்கைக்காக அதனையும் விடத்தயார் என்று தெரிவித்திருந்தார். கங்கை நதிக்காக தமது உயிர் போகும் வரை போராடுவேன் என தெரிவித்திருந்த, ஜி.டி. அகர்வால் இறுதி மூச்சு உள்ள வரை போராடி உயிர்நீத்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்