இந்தியா - வியட்நாம் நாடுகளின் கடலோர காவல் படையினர் இணைந்து கூட்டுப் பயிற்சி

இந்தியா - வியட்நாம் நாடுகளின் கடலோர காவல் படையினர் இணைந்து செய்த கூட்டுப்பயிற்சியில், வீரர்கள் மிகப் பிரம்மாண்டமாகவும், தத்ரூபமாகவும் நடுக்கடலில் சாகசம் செய்தனர்.
இந்தியா - வியட்நாம் நாடுகளின் கடலோர காவல் படையினர் இணைந்து கூட்டுப் பயிற்சி
x
* நாட்டின் கடல்சார் பாதுகாப்பில் பல்வேறு நாடுகளுடன் இந்தியா நல்லுறவு பேணி வருகிறது. அந்த வகையில், ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கொரியா உள்ளிட்ட நாட்டின் கடலோர காவல்படையினருடன் இணைந்து இந்தியா அவ்வப்போது கூட்டுப்பயிற்சி செய்து வருகிறது. 

* இந்நிலையில் 2015ஆம் அண்டு டெல்லியில் இந்திய கடலோர காவல் படையுடன் கையெழுத்தான  புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில்,சென்னை வந்த வியட்நாம் கடலோர காவல்படையினர் வங்க கடலில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டனர் 

* வியட்நாம் கடலோர காவல்படை கப்பல் CSB 8001 உடன், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 4 கப்பல்களும், ஒரு ஹெலிகாப்டரும் இந்த பயிற்சியில் ஈடுபட்டன.

* கடற்கொள்யைர்களின் கப்பலை தடுத்து அவர்களை கைது செய்வது, நடுக்கடலில் கப்பலில் பிடித்த தீயை தண்ணீர் பீச்சியடித்து அணைப்பது, கடலில் தவறி விழுந்த கடலோர காவல் படை வீரரை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பது உள்ளிட்ட காட்சிகளை வீரர்கள் தத்ரூபமாக நடித்து காட்டினர்.

* இந்த கூட்டுப் பயிற்சியின் மூலமாக இருநாட்டு கடலோர காவல் படையினரின் தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்தும், அவர்கள் எவ்வாறு இயங்குகிறார்கள் என்பது குறித்தும் தெரியும் என்று இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய ஐஜி பரமேஷ்வர் தெரிவித்தார். 

* இது போன்ற கூட்டுப் பயிற்சியின் மூலமாக இரு நாடுகளுக்கிடையேயான நட்பு, மேலும் அதிகரிக்கும் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்